கன்னியாகுமரி மாவட்ட மேற்கு கடற்கரை பகுதியான மிடலாம் முதல் நீரோடி வரை 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் பல்லாயிரகணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஒரு துறைமுகமாக தேங்கப்பட்டணம் மீன் பிடி துறைமுகம் இருந்து வருகிறது. இந்நிலையில் இக்கட்டமைப்பு சரி இல்லாமால் உள்ளதால் துறைமுகம் அமைக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை 14-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் இந்த வாரம் மட்டும் 5 விபத்துக்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று மீண்டும் மீன் பிடித்து விட்டு கரை திரும்பிய நான்கு பைபர் படகுகள் ஒன்றன் பின் ஒன்றாக கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், பூத்துறை கிராமத்தை சேர்ந்த ‘சைமன்’ என்பவர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

மேலும் இந்த விபத்தில் சிக்கிய மூன்று மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதில் மீனவர்கள் பயன்படுத்திய மீன்பிடி வலைகள் தண்ணிரில் மூழ்கியது. தேங்காபட்டணம் துறைமுகத்தில் இதுவரை 14 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த எண்ணிக்கையை சேர்த்தால் 15ஆக உயர்ந்துள்ளது. இந்த பகுதியில் தொடர்ந்து ஏற்படும் விபத்தை தடுக்க துறைமுகத்தை மறு கட்டமைப்பு செய்ய வேண்டுமாறு மீனவர்கள் மீண்டும் தமிழக அரசாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.