அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவின் போர்ட்பிளேரில் 253 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 2.29 மணியளவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் ஆழம் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் சேதம் அல்லது யாருக்கும் காயம் ஏற்பட்டதாக இதுவரைக்கும் எந்த தகவலும் இல்லை.

டெல்லி, நொய்டா, காசியாபாத், குருகிராம் மற்றும் உத்தரபிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் தூக்கம் களைந்துள்ளது. நிலநடுக்கத்திற்கான தேசிய மையத்தின் தகவலின்படி, நிலநடுக்கம் நேபாளத்தில், பித்தோராகருக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 90 கி.மீ. பகுதியில் கடந்த சில நாட்களாக குறைந்த அளவு நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
Earthquake of Magnitude:4.3, Occurred on 10-11-2022, 02:29:36 IST, Lat: 9.45 & Long: 93.44, Depth: 10 Km ,Location: 253km SSE of Portblair, Andaman and Nicobar island, India for more information download the BhooKamp App https://t.co/i49u0aOWhJ@Indiametdept @ndmaindia pic.twitter.com/Qt6149tx9O
— National Center for Seismology (@NCS_Earthquake) November 9, 2022
நிலநடுக்கம் குறித்த தங்கள் அனுபவங்களை மக்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.