துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவில், உயிரிழந்தோர் எண்ணிக்கை மூவாயிரத்து 400 ஐக் கடந்துள்ளது. உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று உலக சுகாதார அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது. பேரிடர் காரணமாக, துருக்கியில் 7 நாள்கள் துக்கம் கடைபிடிக்கப்படுமென அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ள துருக்கி, சிரியா மக்களுக்கு ஜெர்மனி, ஈராக் உள்ளிட்ட நாடுகள் நிவாரணப் பொருள்களை வழங்கி வருகிறது. நிலநடுக்கத்தால் வீடுகள், வணிக வளாகங்கள் என ஏராளமான கட்டடங்கள் சரிந்து தரைமட்டமாகி குவியல் குவியலாக காணப்படுகின்றன.
