Skygain News

நெல்லை அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலி..!

நெல்லை மாவட்டம் புதூர் கண்ணப்பர் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் 24 வயதான கார்த்தி. இவர் புதூர் பேரூராட்சியில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு புதூர் பேரூராட்சி குப்பை கிடங்கு பகுதியில் உள்ள மின் கம்பத்தில் மின் விளக்கு பழுதடைந்து உள்ளது. இதனால் கார்த்திக், பழுதை நீக்குவதற்காக அலுமினிய ஏணியை வைத்து மின் கம்பத்தில் ஏறியுள்ளார். அங்கு பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் புதூர் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின்சாரம் தாக்கி இளைஞர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.