அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல் பட்டு வரும் டுவிட்டர் சமூக வலைதள நிறுவனத்தை தொழில் அதிபர் எலான் மஸ்க் ரூ.3.50 லட்சம் கோடிக்கு சமீபத்தில் வாங்கியுள்ளார்.
திவாலாகி கொண்டு இருக்கும் நிறுவனத்தை சீரமைக்க அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார்.

முதல் கட்டமாக தலைமை பொறுப்பில் இருந்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார். அடுத்தப்படியாக 50 சதவீத பணியாளர்களை வேறு வழியில்லாமல் வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக 3,788 பேர் வேலை இழந்தனர்.
இந்நிலையில் மேலும் 5,500 ஒப்பந்த ஊழியர்களை எலான் மஸ்க் அதிரடியாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ரியல் எஸ்டேட், மார்க்கெட்டிங், பொறியியல் மற்றும் பிற துறைகளில் பணிபுரியும் அமெரிக்காவை தளமாக கொண்ட மற்றும் உலகளாவிய ஊழியர்களை இது பாதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.