விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில், விழுப்புரம் சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் முன்னிலையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் தொடர்பான துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் சார்பில் ஏனாதிமங்கலம் எல்லீச்சத்திரம் அணைகட்டு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தென்பணியாற்று வெள்ளப்பெருக்கின் போது வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
இதேபோல் தளவானூர் எனதிரிமங்கலம் இடையே கட்டப்பட்ட தடுப்பணை தென் பண்ணையாற்று வெள்ளப்பெருக்கில் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் வீணாக கடலில் நீர் திறப்பதாக விவசாய மக்கள் உடனடியாக அணைகளை சீரமைத்து தர கோரிக்கை வைத்தனர்.
இதேபோல் மாவட்டத்தில் கிராமப்புற சாலைகள் மற்றும் நகரத்தில் உள்ள பாதாள சாக்கடை திட்டப் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் விழுப்புரம் சட்டமன்ற தொகுதி மக்கள் கோரிக்கை வைத்தன.
இன்று இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் விவசாய மக்கள் பயன்பெறும் வகையில் முதலில் ஏனாதிமங்கலம் எல்லீஸ்சத்திரம் அணை மற்றும் தளவானூர் தடுப்பணை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அரசுத்துறை அலுவலருக்கு அறிவுறுத்தினார்.