கரூர் குப்பம் கிராமத்தில் நான்கு ஆண்டுகளாவே அனுமதியின்றி சட்டவிரோதமாக கல்குவாரி இயங்கி வந்துள்ளது. அன்னை கல்குவாரி என்ற பெயரில் தொடர்ந்து முறைகேடான முறையில் இயங்கி வரும் கல்குவாரி மீதான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர் ஜெகநாதன் மாவட்ட நிர்வாகத்திற்கும், அதிகாரிகளுக்கும் தொடர்ந்து புகார் மனுக்களை அளித்து வந்தார். இதன் எதிரொலியாக கல்குவாரி மூடப்பட்டுள்ளது. இந்த சூழலில் கல்குவாரி மூடப்படுவதற்கு காரணமாக இருந்த ஜெகநாதனை கடந்த 10ம் தேதி கல்குவாரி உரிமையாளர் லாரி ஏற்றி பரிதவமாக படுகொலை செய்துள்ளதாக செய்திகள் ஒன்று வெளிவந்தது. சமூக செயற்பாட்டாளர் ஜெகநாதன் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் பலர் வலியுறுத்தி வருகின்றன.

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “கரூர் மாவட்டம் கரூர்குப்பம் கிராமத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரி குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்த ஜெகநாதன் என்ற சமூக ஆர்வலர் கொடூரமான முறையில் சரக்குந்து ஏற்றி படுகொலை செய்யப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது! இயற்கை வளத்தை பாதுகாப்பதற்காக போராடிய ஒருவரை கொல்லத் துணிகிறார்கள் என்றால், அவர்களுக்கு வலிமையான பின்னணி இருப்பதாகவே தோன்றுகிறது.
கரூர் மாவட்டம் கரூர்குப்பம் கிராமத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கல்குவாரி குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்த ஜெகநாதன் என்ற சமூக ஆர்வலர் கொடூரமான முறையில் சரக்குந்து ஏற்றி படுகொலை செய்யப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது!(1/3) #Justice4Jagannadhan
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) September 12, 2022
அது குறித்து விசாரணை நடத்துவதுடன், ஜெகநாதனின் படுகொலைக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும்! கொல்லப்பட்ட சமூக ஆர்வலர் ஜெகநாதனின் குடும்பத்திற்கு பா.ம.க. சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்; அத்துடன் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்! ” என்று குறிப்பிட்டுள்ளார்.