பிக் பாஸ் சீசன் 6 முடிவுகள் வெளியாகி 3 வாரங்கள் ஆகியும் டைட்டில் வின்னராக அசீமை அறிவித்தது இன்னும் விமர்சிக்கப்படுகிறது.
இதனிடையே இறுதிப் போட்டிக்கு முன்னர் வாக்கு சேகரித்த அசீம், தான் டைட்டில் வென்று 50 லட்சம் கிடைத்தால், அதில் 25 லட்சத்தை கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களின் கல்விக்காக கொடுப்பேன் என்றிருந்தார்.

இந்நிலையில், பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டிக்கொடுத்துள்ள அசீம், 50 லட்சத்துக்கு வருமானவரி பிடித்தம் போக ரூ.35 லட்சம் தான் கையில் கிடைக்கும், அதில் பாதி தொகையான 17.5 லட்சத்தை மாணவர்களுக்கு கொடுப்பேன் மாற்றிப் பேசியுள்ளார்.
இந்த வீடியோவை தற்போது நெட்டிசன்கள் அசீம் பொய் கூறுகிறார் என டிவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.