Skygain News

இனி விமான பயணத்தின்போது முகக்கவசம் தேவையில்லை: விமானப்போக்குவரத்து அமைச்சகம் அதிரடி அறிவிப்பு..!

விமான பயணங்களின்போது பயணிகள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இதுவரை இந்தியாவில் நடைமுறையில் இருந்து வந்தது.

ஆனால் அந்தக் கட்டுப்பாடு இப்போது ரத்து செய்யப்பட்டது . இனி விமான பயணங்கள் போது பயணிகள் முககவசம் அணிவது கட்டாயம் கிடையாது. இதையொட்டிய தகவலை விமான நிறுவனங்களுக்கு சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சகம் அனுப்பி உள்ளது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று மேலாண்மை தொடர்பான அரசின் கொள்கைக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் தருணத்திலும், முககவசம் அணிவது நல்லது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More