தமிழ் சினிமாவில் பல வருடங்களுக்கு முன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி இன்று வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள படம் ‘இந்தியன்’

இந்நிலையில் உலகநாயகனின் நடிப்பில் ‘இந்தியன் 2’ உருவாக இருப்பதாக இயக்குனர் சங்கர் கடந்த சில வருடங்களுக்கு முன் அறிவித்திருந்தார். அதன்பின் படப்பிடிப்பு பணிகளும் தொடங்கி, பின்னர் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன.

இதனால் கமல்ஹாசன் வெவ்வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் ‘விக்ரம்’ பட வெற்றியை தொடர்ந்து , ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன், இந்தியன்-2 படம் செப்டம்பர் மாதம் நிச்சயமாக தொடங்கும்’ என தெரிவித்திருந்தார். இந்த படத்துக்கு கதாநாயகியாக காஜல் அகர்வால் தொடர்ந்து நடிக்கவிருக்கிறார்.

இந்த நிலையில் இந்தியன்-2 படத்தில் நடிக்க இருக்கும் முக்கிய நடிகர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் 1990-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த நடிகர் கார்த்திக் இந்தியன்-2 படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது .