முன்னணி பொருளாதார நிபுணர் மற்றும் முன்னாள் திட்டக்குழு உறுப்பினருமான அபிஜித் சென் அவருக்கு மாரடைப்பு காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 72. இது குறித்து அவரது சகோதரர் பிரணாப் சென் தெரிவிக்கையில், நேற்று இரவு 11 மணிக்கு அபிஜித்துக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்றும் , உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் , இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு உயிரிழந்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

அபிஜித் சென் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது 2004 முதல் 2014 வரை திட்ட கமிஷனில் உறுப்பினராக இருந்துள்ளவர். அத்துடன் விவசாய பொருளாதார நிபுணராகவும், கல்வியாளராகவும் சிறந்து விளங்கியவர் . டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.