தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர்.துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான தனுஷ் இன்று ஹாலிவுட் வரை சென்று அசத்தி வருகின்றார். ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் என பன்முகத்திறன் கொண்டவராக விளங்கி வருகின்றார்.
தற்போது தமிழையும் தாண்டி பாலிவுட் மற்றும் ஹாலிவுட் வரை சென்றி உலகம் முழுவதும் ரசிகர்களை திரட்டி வருகின்றார் தனுஷ்.இந்நிலையில் இந்நிலையில் தனுஷ் தொடர்ந்து தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகின்றார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் வாத்தி படத்தை தொடர்ந்து மேலும் இரண்டு தெலுங்கு படங்களில் தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர், தனுஷ் தற்போது அதிகமாக தெலுங்கு படங்களில் நடிப்பதால் தெலுங்கு கற்றுக்கொள்கின்றனர் என தெரிவித்தார். மேலும் அவர் அடிப்படையிலேயே தெலுங்கு என்பதால் மிகவும் எளிமையாக தெலுங்கை கற்றுக்கொள்வார் என தெரிவித்துள்ளார். இதைகேள்விப்பட்ட ரசிகர்கள் என்ன தனுஷ் தமிழ் கிடையாதா ன்று ஷாக்காகி கேட்பது குறிப்பிடத்தக்கது