இந்திய அணி தற்போது T20உலகக்கோப்பைக்காக தயாராகி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தற்போது ஆஸ்திரேலியா அணியுடன் T20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. இதன் பிறகு தென்னாபிரிக்கா அணியுடன் விளையாடுகிறது. இந்நிலையில் தொடர்ந்து முக்கியமான நேரங்களில் இந்திய அணி சொதப்புவது ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது. எனவே விமர்சகர்கள் முதல் ரசிகர்கள் வரை இந்திய அணி சில விஷயங்களை செய்தால் தான் முன்னேற முடியும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அவை என்னவென்றால் பும்ராவை அணியில் சேர்த்தால், சரியான காம்பினேஷனை கண்டுபிடித்தல் மற்றும் தினேஷ் கார்த்திக்கின் பேட்டிங் வரிசை என அடுக்கடுக்காக பல கருத்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

பும்ரா காயத்தில் இருந்து முழுவதுமாக குணமடைந்த பிறகும், முதல் போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டது. இது ரோஹித் ஷர்மாவும் தவறான முடிவாகத்தான் பார்க்கப்படுகிறது. பும்ரா வந்துவிட்டால் ஓபனிங் ஓவர்களில் புவனேஷ்வர் குமார் 3 ஓவர்களை முடித்துவிடுவார். பும்ரா இரண்டு ஓவர்களை முடித்துவிடுவார். இதனால், ஹர்ஷல் படேல், பும்ரா இருவரும் டெத் ஓவர்களில் பந்துவீசும் நிலை இருக்கு

இதைத்தொடர்ந்து தினேஷ் கார்த்திக்கின் முக்கியத்துவம் அறிந்துதான் ரிஷப் பந்த் ஓரம்கட்டப்பட்டார். அப்படியிருந்தும், அவருக்கு முன்னதாக அக்சர் படேலை களமிறக்குவது சரிதானா என கிரிக்கெட் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அவரை 12,14ஆவது ஓவர்களில் போது களமிறக்கினால் என்ன குறைந்துவிடப் போகிறது. முதல் இன்னிங்ஸாக இருந்தாலும் சரி, தினேஷ் கார்த்திக்கை கடைசி நேரத்தில் 10,15 பந்துகளில் போது மட்டுமே களமிறக்குவோம் என ரோஹித் ஷர்மா உறுதியாக இருந்தால், அது நிச்சயம் பின்னடைவைத்தான் ஏற்படுத்தும் என ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.