மெல்போனில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.இந்த நிலையில் கோப்பையை வென்ற ஜாஸ் பட்லர் தனது அணி வீரர்களுடன் உற்சாகமாக போஸ் கொடுத்தார் .அப்போது மொயின் அலி, ஆதில் ரசித் ஆகியோர் அருகில் இருந்தனர்.
எப்போதும் வெற்றி பெற்ற அணிகளுக்கு மது பாட்டில் வழங்கப்படும்.அதனை பீய்ச்சி வெற்றியை வீரர்கள் கொண்டாடுவது வழக்கம் .இந்த நிலையில் இஸ்லாத்தில் மதுபானம் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். இதனால் ஜாஸ் பட்லர், ஆதில் ரசித்தையும் , மொயின் அலியையும் கொஞ்சம் நகர்ந்துக்க சொல்லி அறிவுறுத்தினார்.
Jos Buttler reminded Adil Rashid and Moeen Ali to leave as England players were going to celebrate with champagne.
— Avinash Aryan (@AvinashArya09) November 13, 2022
Respect Joss THE BOSS. pic.twitter.com/DPWTHhOI6Y
இதனை அடுத்து அவர்கள் இருவரும் அங்கிருந்து ஓடி விட்டனர். இதன்பிறகு தான் ஜாஸ் பட்லர் தன்னிடம் இருந்த மதுபாட்டிலிருந்து மதுவை பீய்ச்சி வெற்றியை கொண்டாடினார்.ஜாஸ்பட்லரின் இந்த செயல் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது.