கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இதுவரை ஜி.பி.முத்து பிரபலமான போட்டியாளராக வலம் வருகின்றார். இதைத்தொடர்ந்து தற்போது ஜி.பி.முத்து பிக் பாஸ் வீட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.
இவரின் ஒவ்வொரு செயலும் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஜிபி முத்துவிடம் பேசும் அசீம், “உங்களுக்கு என்ன வரம் வேண்டும். என்ன வேண்டுமானாலும் நீங்கள் கேட்கலாம்.
நீங்கள் ஒரு எம்எல்எ ஆகவோ, எம்பி ஆகவோ சூப்பர்ஸ்டார் வரை கூட ஆகலாம். எது வேண்டுமென நீங்கள் கேட்பீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த ஜிபி முத்து. “என்னால் முடிந்த அளவுக்கு ஒரு ஆசிரமம் வைக்கணும், நல்ல காரியம் செய்யணும்.

இங்கே 60 கேமரா இருக்கிறது என்பதை நான் நினைக்கவே மாட்டேன். என்னை தனியாக கூட்டிகிட்டு கொண்டு போய் கேட்டாலும் இதைத் தான் நான் சொல்வேன்” என தெரிவித்துள்ளார்