நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். தன் அசத்திய நடிப்பால் பல வெற்றிப்படங்களை கொடுத்த விக்ரம் சமீபகாலமாக வெற்றிப்படத்திற்காக போராடி வருகின்றார். சமீபத்தில் வெளியான கோப்ரா திரைப்படம் விக்ரமிற்கு வெற்றியை தேடி தரும் என்று எதிர்பார்த்த நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியை சந்தித்தது.
எனவே அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் அண்மையில் கடந்த 40 ஆண்டுகளாக வேலை செய்த மேரி என்ற பெண்ணின் மகன் திருமணத்திற்கு விக்ரம் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தத விக்ரம், திருமணத்திற்கு பல லட்சம் செலவு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நடிகர் விக்ரம் வீட்டில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து வருபவர் மேரி.
இவருடைய கணவரும் விக்ரம் வீட்டில் வேலை செய்த பின்னர் காலமானார். இந்நிலையில் மேரியின் மகன் தீபக் என்பவருக்கும் வர்ஷினி என்பவருக்கும் திருப்போரூர் கந்தசாமி ஆலயத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்திற்கு நடிகர் விக்ரம் நேரில் சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, மாப்பிள்ளை வீட்டாரின் அனைத்து செலவுகளையும் விக்ரம் ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியானது. மேலும் இந்த செலவு மட்டுமே பல லட்சம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் நடிகர் விக்ரமை மனதார பாராட்டி வருகின்றனர்.