தமிழ் சினிமாவில் செல்லமே என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் விஷால்.பின்பு சண்டைக்கோழி ,திமிரு ,தாமிரபரணி போன்ற ஆக்ஷன் படங்களில் நடித்து ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்தார்.அதன் பின் பிரபலமான விஷால் தற்போது நடிப்பையும் தாண்டி பல விஷயங்களை செய்து வருகின்றார்.
இந்நிலையில் 11 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார் விஷால். இந்த திருமணம் சென்னையை அடுத்துள்ள மாத்தூர் பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் பள்ளி வளாகத்தில் நடந்துள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியில் நடிகர் சங்கத்தை சேர்ந்த , மனோ பாலா, பூச்சி முருகன், ரமணா, நந்தா, சௌந்தர ராஜன் போன்ற பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.
விஷால் 11 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த கையேடு… சுமார் 51 பொருட்கள் அடங்கிய குடும்பத்திற்கு மிகவும் தேவையான 51 சீர் வரிசை பொருட்களையும் வழங்கியுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை விஷால் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களும் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Truly delighted to be part of this wonderful initiative by #Vishal_Makkal_Nala_Iyakkam pic.twitter.com/qYSxwIVs0Z
— Vishal (@VishalKOfficial) November 6, 2022
விஷால் மாத்தூர் பகுதிக்கு வந்தபோது, ரசிகர்கள் அவருக்கு அமோக வரவேற்பை கொடுத்தனர். இதுகுறித்த புகைப்படங்கள், மற்றும் வீடியோக்கள், சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.