Skygain News

ரோஜா செய்த காரியம்..பாராட்டி தள்ளும் ரசிகர்கள்..!

தெலுங்கு படங்களின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான ரோஜா, செம்பருத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். ரஜினிகாந்த், பிரபு, சரத்குமார், மம்மூட்டி, அர்ஜூன் என பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் ரோஜா.

100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரோஜா, அரசியல் வாதியாகவும் வலம் வருகிறார்.ஆந்திராவில் வெற்றி அமைச்சராக வலம் வரும் ரோஜா தனது தொகுதி மக்களுக்கு ஏராளமான நல்ல விஷயங்களை செய்து வருகிறார். அப்படி அவரை குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.

அதாவது திருப்பதியை சேர்ந்தவர் புஷ்ப குமாரி. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றுக்கு தனது தாயையும் தந்தையையும் பறிகொடுத்தார். அப்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த புஷ்ப குமாரியை மகளாக தத்தெடுத்தார் நடிகை ரோஜா.தற்போது 12 ஆம் வகுப்பு முடித்துள்ள புஷ்ப குமாரி, 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இதேபோல் நீட் தேர்விலும் அதிக மதிப்பெண்கள் பெற்று திருப்பதியில் உள்ள பத்மாவதி மகளிர் கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார். அவரது படிப்பு செலவு முழுவதையும் நடிகை ரோஜாவே ஏற்றுள்ளார். ரோஜா, அவரது கணவர் ஆர் கே செல்வமணி மற்றும் அவர்களின் பிள்ளைகள் ஆகியோர் புஷ்ப குமாரியை சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து கவுரவித்துள்ளனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.