நேற்று நடந்த இந்தியா மற்றும் ஹாங்காங் இடையேயான ஆசிய கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வென்றது. டாஸ் வென்ற ஹாங்காங் கேப்டன் முதலில் பந்துவீச முடிவெடுத்தார். இதையடுத்து முதலில் பேட் செய்ய வந்த இந்திய ஒப்பனர்களான ராகுல் மற்றும் ரோஹித் முதல் இரண்டு ஓவர்களில் நிதானம் காட்டினர். பின்பு அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்த ரோஹித் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் ராகுல் ரன்களை திரட்ட திணறினார். ஒரு கட்டத்தில் ராகுலும் ஆட்டமிழக்க இந்திய அணியை சரிவிலிருந்து மீட்கும் பொறுப்பு கோஹ்லிக்கும் சூரியகுமார் யாதாவிற்கும் இருந்தது. இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 68 ரன்கள் விளாசினார். சூர்யகுமார் கடைசி ஓவரில் மட்டும் 4 சிக்சர் விளாசி 26 ரன்களை குவித்தார்.
இதனால் 160 ரன்கள் மட்டும் எடுக்க வேண்டிய இந்திய அணி 192 ரன்களை குவித்தது.சூர்யகுமார் யாதவுக்கு பக்க பலமாக நின்ற விராட் கோலி தனது நெர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 44 பந்துகளில் 59 ரன்கள் குவித்தார். இந்நிலையில் இன்னிங்ஸ் முடிந்ததும், சூர்யகுமார் யாதவ் பெவிலியன் நோக்கி வரும் போது, விராட் கோலி அவரை பார்த்து இரு கைகளையும் தூக்கியவாறு குனிந்து மரியாதை செய்தார்.
இதனை ஆங்கிலத்தில் Take a bow என்று சொல்வார்கள். உலகின் நம்பர் 1 கிரிக்கெட் வீரர் தனக்கு மரியாதை செய்ததை சூர்யகுமாரால் நம்ப முடியவில்லை. ரசிகர்களும் கோலிக்கு கொஞ்சம் கூட ஈகோ இல்லை என்று கூறி புகழ்ந்து வருகின்றனர்.
