இந்திய அணி ஆசிய கோப்பையில் தோல்வியை சந்தித்தபிறகு தற்போது கவனமாக ஆடி வருகின்றது. அதன் எதிரொலியாக தொடர்ச்சியாக ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்ரிக்காவிற்கு இடையேயான தொடரை வென்றுள்ளது இந்திய அணி.
இந்நிலையில் நேற்று கவுகாத்தியில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 237/3 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 221 /3 ரன்களை மட்டுமே எடுத்ததால் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்திய அணி இன்னிங்ஸின் போது, சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி 19வது ஓவர் வரையில் 28 பந்துகளில் 49 ரன்களை அடித்திருந்தார். அரைசதம் அடிக்க கடைசி ஓவரில் இன்னும் ஒரு ரன் தேவை என்ற சூழலில் தான் தினேஷ் கார்த்திக் ஸ்ட்ரைக்கிற்கு வந்தார்.20வது ஓவரின் முதல் பந்திலேயே தினேஷ், நேராக கோலியிடம் சென்று ஸ்ட்ரைக் கொடுக்கவா?? என்பது போல் கேட்டார்

. ஆனால் கோலியோ, அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், எனது அரைசதத்தை விட, அணியின் ஸ்கோரே நமக்கு முக்கியம், சிக்ஸர்களாக தூக்கி அடி என சைகை காட்டி எந்தவித சுயநலமும் இல்லாத முடிவை எடுத்தார். இதையடுத்து கோலியின் இந்த செய்கையை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.