இந்திய அணி சமீபத்தில் T20 உலகக்கோப்பைக்கான அணியை அறிவித்தது. அந்த அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் ஷமி ஏன் இல்லை என ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து தற்போது மேலும் ஒரு இளம் வீரருக்கு தொடர்ந்து இடம் கிடைக்காதது சுட்டி காட்டி விமர்சித்து வருகின்றனர் ரசிகர்கள்.
அவர் வேறு யாருமல்ல, இந்திய அணியின் இளம் வீரரான ஷுப்மன் கில் தான். சமீப காலமாக, கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஜோடி பல இளம் வீரர்களை அணியில் சேர்த்துள்ளது. ஆனால், அதிரடி பேட்ஸ்மேன் ஷுப்மன் கில், இவர்களின் கூட்டணிக்குப் பிறகு இதுவரை ஒரு டி20 போட்டியில் கூட இடம் பெறவில்லை. ஐபிஎல் 2022-ல் ஷுப்மான் கில்லின் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது.
தனது சிறப்பான பேட்டிங் மூலம் அணியையும் இறுதிப் போட்டியில் வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அவரால் இந்திய டி20 அணியில் இன்னும் இடம் பெற முடியவில்லை.2019 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக முதல் ஒருநாள் போட்டியை சுப்மன் கில் விளையாடினார். அதன்பிறகு, ஒருநாள் போட்டியில் 9 போட்டிகளில் மட்டுமே விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.
இந்தப் போட்டிகளில் அவர் 71.29 சராசரியில் 499 ரன்கள் எடுத்துள்ளார். 9 இன்னிங்ஸில் 1 சதத்தையும், 3 இன்னிங்ஸில் 50 ரன்களையும் கடந்துள்ளார் சுப்மான் கில். மேலும் ஆசிய தொடருக்கு முன்பு நடந்த ஜிம்பாபே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடர்களில் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
எனவே இவ்வாறு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் கில்லை T20 அணிகளிலிருந்து தொடர்ந்து புறக்கணிப்பது தவறு என ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்