சமீபகாலமாக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றது. ஐ.பி.எல் தொடரிலேயே மிகவும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியதாக அவர் மீது பல கிரிக்கெட் விமர்சகர்கள் குற்றம் சாட்டினார். இது போதாது என அவருக்கு காயம் ஏற்பட இந்திய அணியிலிருந்து சிறிது காலம் விலகி இருந்தார்.
பின்பு காயம் சரியானதும் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. அதுவும் எடுபடாமல் போக தற்போது வைஸ் கேப்டன் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது ஆட்டம் தொடர்ந்து விமர்சனங்களை பெற்று வருவதால் அவரை டீமில் இருந்து நீக்குமாறு பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நடந்த ஹாங்காங் எதிரான போட்டியில் 39 பந்துகளை எதிர்கொண்ட அவர் 36 ரன்களை மட்டுமே எடுத்தார்.அதில் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். அதுவும் ஒரு சிக்ஸர் ப்ரி ஹிட்டில் கிடைத்தது. அடுத்த சிக்ஸர் ஸ்லாட் பாலில் சென்றது.
இந்த இரண்டு சிக்ஸர் பந்துகளை சேர்க்காமல் விட்டால் 37 பந்துகளில் 24 ரன்கள்தான். அந்த அளவுக்கு அதிக டாட் பால்களை ராகுல் ஆடினார்.எனவே மேலும் அழுத்தத்தை சுமக்கும் ராகுலுக்கு பதில் விரைவில் பந்த் அணியில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது