ஆசியாவின் மிகப்பிரபலமான மற்றும் பழமையான கால்பந்து தொடர் டுராண்ட் கோப்பையாகும்.நடப்பாண்டு தொடரின் இறுதிப்போட்டியில் நேற்று மும்பை சிட்டி எஃப்சி மற்றும் பெங்களூரு எஃப்சி அணிகள் மோதின.பரபரப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்ற இந்த போட்டியில் சுனில் சேத்ரி தலைமையிலான பெங்களூரு எஃப்சி அணி 2 – 1 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தியது.
இதுமட்டுமல்லாமல் கோப்பையையும் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது. கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் இருந்த சுனில் சேத்ரி கோப்பையை வாங்கும் சமயத்தில் சங்கடமான சூழலுக்கு தள்ளப்பட்டார்.போட்டிக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் ஒன்றாக இணைந்து சுனில் சேத்ரியிடம் கோப்பையை வழங்கினர்.
அப்போது புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதற்காக அனைவரும் இருந்த இடத்தில் அனுசரித்து நின்றனர். ஆனால் புகைப்படத்தில் மிக முக்கியமாக இடம்பெற வேண்டிய நபரும் அவர்தான் ஆகும். ஆனால் அவரே கடைசியில் ஒதுக்கப்பட்டார்.மேற்குவங்க மாநில ஆளுநர் இல.கணேசன், தான் புகைப்படத்தில் நன்றாக தெரிய வேண்டும் என்பதற்காக, கேப்டன் சுனில் சேத்ரியை கையை வைத்து தள்ளினார்.
இதனால் இரு கைகளால் கூட கோப்பையை பெற முடியாமல் அவர், விரல் படும்படி நின்றுக்கொண்டு கோப்பையை பெறுக்கொண்டார். இந்த செயல் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது
Sunil Chhetri vs Acting Governor of West Bengal
— Debojyoti Sarkar 🇮🇳 (@djsarkar18) September 18, 2022
Durand 2022 Appearances: 7 – 0
Durand 2022 Goals: 3 – 0
Durand 2022 Minutes played: 573 – 0
Photos with Durand 2022 Trophy: 1 – 13
PadmaShri Awards: 1 – 0
Number of days spent hiding from Police: 0 – 365#SunilChhetri pic.twitter.com/6BVZTY7NYd