பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் அஸீமுடன் ஆயீஷா சேர்ந்து ரச்சிதாவை வெளியேற்றினார்.இதுகுறித்து நேற்றைய எபிசோடில் கமல் விசாரித்த போது, ரச்சிதாவை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அவருடைய பொம்மையயை எடுத்ததாக கூறினார்.
மேலும் தன்னை தவறாக போட்ரே பண்ணாதீர்கள் என்று கமல்ஹாசன் மீது பழி சுமத்தினார் ஆயிஷா. இதனைக் கேட்டு அதிர்ச்சியான கமல் எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் சிரித்தப்படியே நான் என்னைதான் போட்ரே செய்கிறேன் என்று கூறினார்.
இந்நிலையில் தன்னுடைய தவறை கடைசி வரை உணராத ஆயிஷா, கமலிம் ரொம்பவே ஆட்டியூட் காட்டினார். கமலின் முகத்தைக் கூட பார்த்து பேசாமல் அவரை அவமானப்படுத்தினார். ஆயிஷாவின் இந்த ஆட்டியூடை பார்த்த நெட்டிசன்கள் அவரை கண்டப்படி திட்டி தீர்த்து வருகின்றனர்.