இந்திய அணி அடுத்தாண்டு நடைபெற இருக்கும் T20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ரசிகர்கள் முதல் விமர்சகர்கள் வரை கணித்த அணியே உலககோப்பைக்கு தேர்வாகியுள்ளது. இருப்பினும் சில சர்ச்சைகளும், விமர்சனங்களும் எழுந்து வருகின்றது.
அதாவது நேற்று இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்து ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து முஹம்மது ஷமி மற்றும் சஞ்சு சாம்சன் இருவரின் பெயர்களும் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தன.

ரசிகர்களால் அதிகம் விரும்பப்படக் கூடிய இந்த இரண்டு வீரர்களும் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர். வேகப்பந்து வீச்சாளர் ஷமி குஜராத் டைட்டான்ஸ் அணியில் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர்.அதேபோல, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இறுதிப் போட்டி வரை கொண்டு சென்றதில் சஞ்சு சாம்சனின் பங்கு அளப்பறியது.

ஸ்டாண்ட் பை வீரர்களின் பட்டியலில் ஷமியின் பெயர் இடம்பெற்றிருக்கும் நிலையில், சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெறாதது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ட்விட்டரில் பல ரசிகர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் ஷமி ஆகியோருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். இன்னும் சிலர் இந்திய அணி இவர்களை தேர்வு செய்யாததர்க்கு கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.