Skygain News

மீண்டும் சொதப்பிய கே.எல் ராகுல்..வெச்சு செய்யும் ரசிகர்கள்..!

இந்தியா அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியுடன் தோல்வியை சந்தித்து வெளியேறியது.இதன் காரணமாக உச்சகட்ட சோகத்தில் இருக்கும் ரசிகர்கள் இந்திய வீரரான கே.எல்.ராகுலை விளாசி வருகின்றனர்.ஆட்டத்தின் முதல் பந்திலேயே கேஎல் ராகுல் பவுண்டரி அடித்தார்.

இதனால், ராகுல் இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கம் போல், இங்கிலாந்து பந்துவீச்சை தொட முடியாமல் திணற ஆரம்பித்தார். இதே போன்று ரோகித்துக்கும் இங்கிலாந்து பவுலர்கள் நெருக்கடி கொடுத்தனர்.இதனைத் தொடர்ந்து கிறிஸ் வொக்ஸ் பந்துவீசினார்.

கிறிஸ் வொக்ஸ் தனது உயரத்தை பயன்படுத்தி பந்து நன்றாக பவுன்ஸ் ஆகும் வகையில் பந்துவீசினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ராகுல் பந்தை அடிக்க முற்பட்டு எட்ஜ் வாங்கினார். இதனால், ராகுல் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 9 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்தது.

இந்நிலையில் தொடர்ந்து முக்கியமான ஆட்டத்தில் கே.எல் ராகுல் சொதப்புவதால் ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.