விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோ தற்போது 50 நாட்களை கடந்து இருக்கிறது. “50 நாட்கள் ஆகிவிட்டது, தைரியமா விளையாடுங்க என தற்போதும் சொல்ல வேண்டியதா இருக்கு” என கமல்ஹாசன் போட்டியாளர்கள் எல்லோரையும் விமர்சித்தார். எல்லோரும் safe game ஆடுகிறீர்கள் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் நேற்று நடந்த எபிசோடில் ரசிகர்கள் போட்டியாளர்களிடம் கேள்வி கேட்டனர். அதில் ஒரு ரசிகை மைனாவிடம், உங்க பெய்டு ஹாலிடே எப்படி இருக்கு என கேட்டார். அதாவது மைனா போன்ற சில போட்டியாளர்கள் லட்ச கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் ஜாலியாக சுத்துவதை தான் அவர் மறைமுகமாக கேட்டுள்ளார்.
#Myna #Manikanta Wasted Moment 😂😂😂#Biggboss #Azeem #Vikraman#BiggBossTamil#BiggBossTamil6 pic.twitter.com/Wc1DVThzAh
— Vidya Suganya (@Vidya_Suganya) November 27, 2022
இந்த கேள்வியை கேட்ட உடனே மைனாவிற்கு கோபம் வந்துவிட்டது. அதற்கு பதிலளித்த அவர், உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் என்னை வெளியே அனுப்பிவிடுங்கள் என்று திமிராக பதில் கூறினார். இதனால் தற்போது சமூகத்தளங்களில் ரசிகர்கள் மைனாவை வெளுத்து வாங்கி வருகின்றனர்.