நேற்று நடைபெற்ற இலங்கை மற்றும் பாகிஸ்தான் எதிரான ஆசிய கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றது. இது ஒருபுறமிருக்க பாகிஸ்தான் அணி நேற்று பீல்டிங்கில் படு மோசமாக செயல்பட்டது. இதுவே இலங்கை அணிக்கு சாதகமாக அமைந்தது.
முக்கியமான தருணத்தில் கேட்சை தவறவிட்டதே பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் முதல் விமர்சகர்கள் வரை கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அன்றையிலிருந்து பாகிஸ்தான் அணி பீல்டிங்கில் சொதப்புவதையும் ரசிகர்கள் மீம் போட்டு சோஷியல் மீடியாக்களில் கலாய்த்து வருகின்றனர்.
ஸ்ரீலங்கா விக்கெட்களை கொடுத்து தத்தளித்த தருணத்தில் ராஜபக்சா தனி ஆளாக நின்று போராடி கொண்டிருந்தார். ராஜபக்சாவின் விக்கெட்டை எடுத்தால், பாகிஸ்தானுக்கு அது சாதகமாக இருந்திருக்கும். 18.6 வது ஓவரில், ஹஸ்னாயின் வீசிய பந்தை ராஜபக்சா தூக்கி அடித்தார்.

அப்போது சிக்சர் லைனில் நின்ற ஆசிஃப் அலி, அதனை பிடித்தார். அப்போது சம்பந்தமே இல்லாமல் ஓடி வந்த ஷதாப் கான், கேட்ச் பிடிக்கிறேன் என்று ஆசிஃப் அலியை மோதினார். இதனால், அவர் பிடித்திருந்த பந்து சிக்சருக்கு சென்றது. இந்த காட்சியை பார்த்ததும் பாகிஸ்தான் ரசிகர்கள் கடுப்பாக, மற்றவர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர். சோஷியல் மீடியாவில் இதைப்பற்றி பல மீம்ஸ் வந்துகொண்டே தான் இருக்கின்றது