பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் சண்டைக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமிருக்காது. அந்த வகையில் இந்த சீசன் துவங்கிய சில நாட்களிலேயே சண்டைகள் துவங்கியுள்ளன. சில நாட்களாக ஜி.பி.முத்துவிற்கும், தனலக்ஷ்மிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகின்றது.
இந்நிலையில் ஜிபி முத்துவை மரியாதை குறைவாக தான் பேசவில்லை என வாதிட்டு வரும் தனலட்சுமிக்கு தற்போது ரசிகர்கள் ஒரு குறும்படத்தை பார்சல் செய்துள்ளனர்.என்னவென்றால் ஜனனி நீங்கள் ஜி.பி முத்துவை அவன் இவன் என்று பேசியது தவறு என தனலட்சுமியை கண்டித்தார்.
உடனடியாக அவன் இவன் என்றோ ஜிபி முத்துவை பற்றி மரியாதைக் குறைவாக ஒரு வார்த்தை கூட தான் பேசவில்லை என வாதம் செய்த தனலட்சுமிக்கு ரசிகர்கள் சூப்பரான ஒரு குறும்படத்தை போட்டு வெளுத்து வாங்கி வருகின்றனர்.
#BiggBossTamil #biggboss6tamil #BiggBossTamil6 #GPMuthu
— Ravi Hari (@ravihari79) October 13, 2022
Kurumpadam for #Dhanalakshmi
Watch till end..
Credits: For the creator pic.twitter.com/MrgmZdUdGq
ஜிபி முத்து பற்றி பேசும் போது அது கிடக்குது லூசுன்னு தனலட்சுமி பேசிய வீடியோ க்ளிப்பை எடிட் செய்து குறும்படமாக ரசிகர்களே போட்டு வெளுத்து வாங்கி வருகின்றனர்