சமீபத்தில் வெளியான தமிழ் படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் என்னதான் நன்றாக இருந்தாலும் தெலுங்கு ரசிகர்கள் சிலர் அப்படத்தை விமர்சித்து வந்தனர். இந்நிலையில் தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் ஆதிபுருஷ் படத்தின் டீசரை பார்த்துவிட்டு தமிழ் ரசிகர்கள் விட்டு விளாசி வருகின்றனர்.
ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள ‘ஆதிபுருஷ்’ படத்தை இயக்குனர் ஓம் ராவத் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக க்ரித்தி சனோன் நடித்துள்ளார். ராவணன் கேரக்டரில் சைஃப் அலி கான் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் வெளியாகியுள்ள ‘ஆதிபுருஷ்’ டீசரை வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.500 கோடி பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ஆதிபுருஷ் படத்துக்கு அதிகம் எதிர்பார்ப்பு காணப்பட்ட நிலையில் தற்போது வெளியாகியுள்ள டீசர், ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

3டி ப்ளஸ் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் டீசர், பார்க்க பொம்மை படம் போல் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.