விஜய் தற்போது வம்சியின் இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகவுள்ளது.இந்நிலையில் வாரிசு படத்திலிருந்து முதல் பாடல் கடந்த மாதம் வெளியானது. விஜய் பாடிய ரஞ்சிதமே என்ற பாடல் வெளியாகி செம ஹிட்டடித்தது.
இருப்பினும் இப்பாடல் சில ட்ரோல்களை சந்தித்தது. சில பாடல்களின் காப்பிதான் ரஞ்சிதமே என்று சில ரசிகர்கள் இணையத்தில் ட்ரோல் செய்து வந்தனர். இருப்பினும் பொதுவான ரசிகர்களுக்கு இப்பாடல் மிகவும் பிடித்திருந்தது .குறிப்பாக இப்பாடலில் விஜய்யின் நடனத்தை காண ரசிகர்கள் ஆவலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.இதையடுத்து தற்போது தீ தளபதி என்ற பாடல் வெளியாகியுள்ளது.
விவேக் எழுதியுள்ள இப்பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். பாடியது மட்டுமல்லாமல் இப்பாடலின் லிரிகள் வீடியோவில் நடனமும் ஆடி அசத்தியுள்ளார் சிம்பு. தற்போது இப்பாடலை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் இப்பாடலின் வரிகள் விஜய்க்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாகவும் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தீ தளபதி பாடல் நேற்றைய தினம் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் நிலையில் அதே சமயம் சில ட்ரோல்களையும் சந்தித்து வருகின்றது. அதாவது இப்பாடல் அனிருத் இசையில் நானும் ரவுடி தான் படத்தில் இடம்பெற்ற வரவா வரவா என்ற பாடலை போல இருப்பதாக சிலர் கூறி வருகின்றனர். மேலும் சிலர் தமன் அப்பட்டமாக அப்படியே அந்த பாடலை காப்பி அடித்து தீ தளபதி பாடலை உருவாக்கியுள்ளார் என விமர்சித்து வருகின்றனர்.
#TheeThalapathy for my dear #Thalapathy @actorvijay na & darling @MusicThaman ❤️
— Silambarasan TR (@SilambarasanTR_) December 4, 2022
Best wishes to the whole team @directorvamshi @Lyricist_Vivek @iamSandy_Off @dop_gkvishnu @SVC_official 🙏🏻#Varisu #VarisuSecondSingle #30YearsOfThalapathy #30YearsOfVijay https://t.co/S77BMr29xN