தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கும் விக்ரம் கடந்த சில ஆண்டுகளாக ஒரு ஹிட் படத்திற்காக காத்துக்கொண்டிருந்தார். தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் விக்ரமிற்கு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான கோப்ரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தேடித்தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நேற்று வெளியான இப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்தது. என்னதான் வழக்கம் போல விக்ரமின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டினாலும் ஸ்வாரஸ்யமில்லாத திரைக்கதை, குழப்பமான கதைக்களம் ஆகியவை ரசிகர்களை சோதித்ததாக கருத்துக்கள் வெளியாகின.
இந்நிலையில் தற்போது கோப்ரா திரைப்படத்தில் ஒரு காட்சி அப்படியே இன்சைட் என்ற குறும்படத்தில் இருந்து காப்பிடித்துள்ளதை கண்டு பிடித்துள்ளனர் நெட்டிசன்கள்.
இரண்டு திரைப்படங்களின் காட்சியையும் ஒரே மாதிரி இருப்பதால் இதை கண்ட ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர். இதனைப்பார்த்த ரசிகர்கள் கோப்ரா பட இயக்குனரை சமூகத்தளங்களில் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
யாரோ உங்க @AjayGnanamuthu சீன திருடிட்டாங்க பத்து வருஷம் முன்னாடி.#Cobra pic.twitter.com/cR9VbYi6N5
— மிஸ்டர்.உத்தமன் (@MrUthaman) August 31, 2022