வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்றுள்ளது. நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சிய் தோல்வியை சந்தித்துள்ளது.வங்கதேச அணி கடைசி விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கும் மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து த்ரில் வெற்றியை பெற்றது. இதில் இந்திய அணி பந்துவீச்சாளர்களின் செயல்பாடுகள் மற்றும் ரோகித் சர்மா கேப்டன்சி குறித்து அதிக விமர்சனங்கள் எழுந்துள்ளது.
187 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வங்கதேச அணி 136 ரன்களுக்கே 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது வங்கதேச அணியின் மெஹதி ஹசன் மிராஸ் – முஷ்டஃபிகுர் ரஹ்மான் களத்தில் இருந்தனர். டெய்லண்டர் பேட்ஸ்மேன்களான இருவருக்கும் இந்திய பந்துவீச்சாளர்கள் பிட்ச்சை நம்பியும், ஸ்விங்கை நம்பியுமே பந்துவீசினர்.குறிப்பாக தீபக் சஹர் மற்றும் ஷர்துல் தாகூர் எந்த யார்க்கரையும் வங்கதேச பேட்ஸ்மேன்களுக்கு வீசவில்லை.
Things went right down to the wire but it was Bangladesh who won the first ODI.#TeamIndia will look to bounce back in the second ODI of the series 👍 #BANvIND
— BCCI (@BCCI) December 4, 2022
Scorecard 👉 https://t.co/XA4dUcD6iy pic.twitter.com/Ko3Snyqdpp
அதேபோல் 50 ஓவர்களில் வங்கதேச பேட்ஸ்மேன்களுக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் ஒரு யார்க்கர் பந்துகளை கூட வீசவில்லை.மேலும் இதுமட்டுமல்லாமல் வங்கதேச அணி 150 ரன்கள் எடுத்திருந்த போது மெஸதி ஹசன் கொடுத்த கேட்ச்சை விக்கெட் கீப்பராக செயல்பட்ட கேஎல் ராகுல் தவறவிட்டது ஆட்டத்தின் முக்கிய திருப்புமுனையாக இருந்தது. இதனால் இந்திய அணியின் தோல்விக்கு பேட்டிங், பவுலிங், கேப்டன்சி, ஃபீல்டிங் என அனைத்திலும் மோசமாக செயல்பட்டதே காரணமாக பார்க்கப்படுகிறது.