ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று கிரிக்கெட் உலகின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதின. துபாயில் நடைப்பெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக முடிவெடுத்தார்.
மேலும் பலருக்கும் ஆச்சர்யமளிக்கும் விதமாக இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் பதிலாக அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் விளையாடினார். இது பல ரசிகர்களாலும், விமர்சகர்களும் ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது.
முதலில் பந்துவீசிய இந்திய அணி ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. சீரான இடைவேளையில் பாகிஸ்தான் வீரர்கள் தங்கள் விக்கெட்களை பறிகொடுக்க அவர்களால் 20 ஓவர்களில் 147 ரன்கள் மட்டுமே அடிக்கமுடிந்தது.
அதிகபட்சமாக இந்திய வீரர் புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதனையடுத்து இந்திய வீரர் கேஎல் ராகுல், நடப்பாண்டில் முதல் முறையாக டி20 போட்டியில் களமிறங்கினார். ஐபிஎல் தொடருக்கு பிறகு 2 மாதம் கழித்து இந்திய டி20 அணிக்கு ராகுல் திரும்பினார்.
இந்திய வீரர் புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதனையடுத்து, இந்திய வீரர் கேஎல் ராகுல், நடப்பாண்டில் முதல் முறையாக டி20 போட்டியில் களமிறங்கினார். ஐபிஎல் தொடருக்கு பிறகு 2 மாதம் கழித்து இந்திய டி20 அணிக்கு ராகுல் திரும்பினார் கேஎல் ராகுலுக்கு போதிய மேட்ச் பிராக்டிஸ் இல்லை. அவருடைய பார்ம் குறித்தும் சந்தேகம் உள்ளது.
இதனால் அவர் அணியில் இடம்பெறுவது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பட்டது. ஆனால், கேப்டன் ரோகித் சர்மா கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கிவிட்டு ரிஷப் பண்டை அணியிலிருந்து நீக்கினார்.இந்த நிலையில், ஆட்டத்தின் 2வது பந்தை எதிர்கொண்ட கேஎல் ராகுல், அறிமுக வீரர் நசிம் ஷா பந்துவீச்சில் போல்ட் ஆனார். இது ரசிகர்களை வெறுப்படைய செய்துள்ளது. 2 மாதம் விளையாடாத ஒரு வீரரை முக்கியமான போட்டியில் தேர்வு செய்தது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், தொடர்ந்த அனைத்து டி20 போட்டியில் விளையாடி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட் போன்ற வீரரை வெளியே உட்கார வைத்தது நியாயமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த ஆட்டத்தில் இந்தியா தோற்றால், அதற்கு ராகுல் தான் முக்கிய காரணம் என்றும் ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.இதைத்தொடர்ந்து அடுத்த போட்டியில் கே.எல்.ராகுலுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது