Skygain News

கமலின் மருத்துவ அறிக்கை…அப்போ இந்த வாரம் பிக் பாஸ் தொகுப்பாளர் யார் ?

பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் துவங்கியதில் இருந்து அதை தொகுத்து வழங்கி வருகிறார் உலக நாயகன் கமல் ஹாசன். இந்நிலையில் காய்ச்சல் காரணமாக சென்னை போரூரில் இருக்கும் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கமல். அவர் நேற்றே வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குவாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

அவ்வாறு கமல் தொகுத்து வழங்கமுடியவில்லை என்றால் ரம்யா கிருஷ்ணன் அல்லது சிம்பு இந்த வாரம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள் என சிலர் கூறிவருகின்றனர். இருப்பினும் அதற்குள் கமல் குணமடைந்து நிகழ்ச்சிக்கு வந்துவிடுவார் என தெரிவது குறிப்பிடத்தக்கது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More