கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் யாருக்கும் தெரியாமல் அநாகரீக செயலில் ஈடுபட்டார் அமுதவாணன். அதாவது பெண் போட்டியாளர்கள் பாத் ரூமில் குளித்துக் கொண்டிருந்த போது மைக்கை கழட்டி வைத்துவிட்டு கதவின் இடுக்கு வழியாக அவர்கள் குளிப்பதை திருட்டுத்தனமாக பார்த்தார்.
அமுதவாணனின் இந்த மோசமான செயலை பார்த்த பிக்பாஸ், அமுதவாணன் மைக்கை மாட்டுங்கள் என எச்சரித்தார். இதனால் மிரட்டு போன அமுதவாணன் மைக்கை மாட்டிக் கொண்டு ஓட்டம் பிடித்தார்.அமுதவாணனின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது.

இதனை பார்த்த நெட்டிசன்கள், அமுதவாணனுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.ஆனால் கமல்ஹாசன் அந்த விவகாரம் குறித்து வாயே திறக்கவில்லை.இதனால் அப்செட் ஆகியுள்ளனர் ரசிகர்கள். கமல்ஹாசன் நேரடியாக விசாரிக்காவிட்டாலும் மறைமுகமாகவாது அமுதவாணனை கண்டித்திருக்கலாம் என அதிப்ருதியை வெளிப்படுத்தி வருகின்றனர்.