இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது டி20 போட்டி நடைபெற்றது. எனினும் மழையின் காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது.ஆனால் இந்த ஆட்டத்திலும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை
கடந்த போட்டியிலேயே அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட்-க்கு வாய்ப்பு தரப்பட்டது. ஆனால் வழக்கம் போல 6 ரன்களுக்கு வெளியேறி சொதப்பினார். தொடர்ச்சியாக அவரது மூன்றாவது சொதப்பலாகும். எனினும் அவருக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு தரவுள்ளனர்.

இந்நிலையில் சஞ்சு சாம்சன் களமிறங்க வேண்டிய இடத்தில் ரிஷப் பண்ட், தீபக் ஹுடா என பலருக்கும் வாய்ப்பு தரப்பட்டு வருகிறது. நல்ல திறமையும், ஃபார்மும் இருந்த போதும், சஞ்சு சாம்சன் மீண்டும் மீண்டும் ஒதுக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார் என்பதால் ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.