தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள வாகைகுளம் என்ற கிராமத்தில் உள்ள குளத்தில் ஆண்டுதோறும் செப்டெம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை வெளிநாட்டு பறவைகள் உள்பட 100 -க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் கூடுகட்டி குஞ்சுகள் பொறித்து செல்கின்றன.

இதை தொடர்ந்து தற்போது வீராசமுத்திரம் ஊராட்சியில் நடந்து முடிந்த கிராம சபை கூட்டத்தில் இங்கு பறவைகள் சரணாலயம் அமைக்க சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் இன்று கடையம் அருகே நடைபெற்ற மனுநீதி முகாமில் எங்கள் பகுதிக்கு சரணாலயம் வேண்டாம் என இப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து கிராமத்தினர் கூறுகையில், இந்த குளத்தின் மூலம் சுமார் 500 ஏக்கர் நஞ்சை நிலம் பயனடைகிறது. பறவைகள் சரணாலயம் அமைத்தால் நீர்நிலைகள் பாதிக்கப்படும், இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. நாங்கள் பறவைகள் வருகை தருவதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை, ஆனால் பறவைகள் சரணாலயம் என்பதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்தனர் …