Skygain News

அரசு விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் அதிருப்தி…

கடந்த ஒரு வாரமாக செஞ்சி அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் கொண்டு வரும் நெல் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் .

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை ஏலத்தில் எடுப்பதற்கு ஆன்லைன் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது ஆனால் தொடர்ந்து ஒரு வாரமாக வியாபாரிகள் மத்திய அரசு கொண்டுவந்துள்ள இ நாம் திட்டத்தில் நெல் கொள்முதல் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் விவசாயிகள் தொடர்ந்து விற்பனைக்காக நெல் மூட்டைகளை அதிகாலையில் கொண்டு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published.