நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் தென்னாப்ரிக்காவிற்கு இடையேயான போட்டியில் பும்ரா இடம்பெறாதது அனைவர்க்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் பும்ரா ஏன் விளையாடவில்லை என்ற காரணம் தற்போது வெளியாகிவுள்ளது.
அதன்படி ஏற்கனவே பும்ரா இரண்டு மாதங்களுக்குப் பிறகு காயத்திலிருந்து குணம் அடைந்து இந்திய அணிக்கு திரும்பினார். ஆஸிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடாத பும்ரா அடுத்த இரண்டு போட்டிகளிலும் பங்கேற்றார். பும்ரா பழைய மாதிரி பந்து வீசவில்லை என்றாலும் அவ்வப்போது தனது யாக்கர் பந்துகளை வீசி வந்தார்.
இதனால் பும்ராவுக்கு டி20 உலக கோப்பை முன்பு போட்டிகள் விளையாடினால் மேட்ச் பிராக்டிஸ் கிடைத்துவிடும் என்று ரசிகர்களும் நம்பினர்.இந்த நிலையில் பும்ரா முதல் டி20 போட்டியில் ஏன் விளையாடவில்லை என்று கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து ரவி சாஸ்திரி கேள்வி கேட்டதற்கு ரோகித் சர்மா மழுப்பலாக பதில் அளித்தார்.

இன்று காலையில் பும்ராவுக்கு முதுகு வலி இருந்ததால் அவர் இன்றைய ஆட்டத்தில் விளையாடவில்லை என்று பதிலளித்தார்.இதனால் பும்ரா இந்த தொடரில் பழைய ஃபார்மை மீட்பாரா என ரசிகர்கள் நம்பினர். ஆனால் அவர் தற்போது முழு உடல் தகுதியுடன் இருக்கிறார்களா என்பதை சந்தேகமாகியுள்ளது.இதன் காரணமாக உலகக்கோப்பையில் பும்ரா இடம்பெறுவாரா இல்லையா என கவலையில் இருக்கின்றனர் ரசிகர்கள்