Skygain News

விழாக்கோலம் பூண்ட தஞ்சாவூர் நகரம் – மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை

தமிழரின் பெருமை உலகம் முழுக்க பரவ முக்கிய காரணமாக இருந்தவர் ராஜராஜ சோழன் போர் , கட்டிட கலை , நாகரிகம் , இராணுவம் என பல முக்கிய வழிமுறைகைளை அன்றே நிகழ்த்தி காட்டி அன்றும் இன்று என்றும் தமிழர்களின் மனதில் வாழும் ராஜராஜ சோழனின் 1037-வது சதயவிழாவினை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இன்று பெருவுடையார் பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் நடைபெறுகிறது . சதய விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இரவில் இந்த பிரமாண்ட அலங்கரிப்பை பார்க்க தஞ்சையே பொன்னகரம் போல் காட்சி அளிக்கிறது .

சோழன் சிலை பூங்கா உட்பட பெரிய கோவில் அருகே இருக்கும் பாலம் உள்ளிட்ட இடங்களிலும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளதால் தஞ்சை நகரமே விழா கோலம் பூண்டிருந்தது .

இந்த ஆண்டு சதய விழா இரண்டு தினங்கள் கொண்டாடப்படுகிறது. நேற்று பெரிய கோவில் வளாகத்தில் மங்கல இசை கனிமேடு அப்பர் பேரவை திருமுறை அரங்கத்துடன் சதய விழா தொடங்கியது. இன்று இரண்டாவது நாள் சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1010 ஆம் ஆண்டில் தஞ்சை பெரிய கோவிலை கட்டி முடித்து குடமுழுக்கு நடத்தினார் மாமன்னன் ராஜராஜ சோழன். இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாக இன்று வரை திகழ்கிறது. ஐப்பசி மாதம் சதய தினத்தன்று பிறந்தவர் ராஜராஜ சோழன் . தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது .

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More