தற்போது விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு, பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில், பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டு வருகிறது. இதில் நடிகர் விஜய் உட்பட, முக்கிய பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ‘வாரிசு’ படம் குறித்து தகவல் சேகரிக்க செய்தியாளர்கள் அங்கு சென்றதாகவும், அப்போது செய்தியாளர்களுக்கும் படக்குழுவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. படக்குழு யானையை பயன்படுத்தி படப்பிடிப்பு நடத்தியதாகவும், முறையான அனுமதி இன்றி யானையை படப்பிடிப்பிற்கு பயன்படுத்தியதாகவும் பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டினார்.

இதன் காரணமாக பத்திரிகையாளர்களும், அங்கு இருந்தவர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து போலீசார் அங்கு வந்து பிரச்னையை தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் மற்றுமொரு தகவல் என்னவென்றால் பத்திரிகையாளர்கள் அனுமதியின்றி படப்பிடிப்பு தளத்தை புகைப்படம் எடுத்ததால் தான் மோதல் ஏற்பட்டது என பேசப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.