பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும் முன்னாள் பிரதமருமாக இருந்து வந்தவர் இம்ரான்கான். இவர் தற்போதைய அரசுக்கு எதிராக தனது ஆதரவாளர்களுடன் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார். அந்த வகையில் வரிசாபாத் நகரில் இம்ரான் கான் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது.

இந்த பேரணியில் நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இம்ரான் கான் உட்பட அவரது கட்சி நிர்வாகிகள் பலர் படுகாயம் அடைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பேரணியில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. காயம் அடைந்த இம்ரான் கானுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.