ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த குக்கூண்டி கிராமத்தில் உள்ள ஏரியில் பேரிடர் மேலாண்மை துறையின் மூலமாக வெள்ள பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி நிகிழ்ச்சியானது நடைபெற்றது .
இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்டவர்களை தீயணைப்பு துறையினர் ஏரியில் இறங்கி அவர்களை மீட்பது போன்ற செயல்முறை விளக்க பயிற்சி பொதுமக்களிடையே நடைபெற்றது.
மீட்கப்பட்ட பொதுமக்களுக்கு முதலுதவி மற்றும் தீவிர சிகிச்சை அளிப்பது குறித்து செயல்முறை விளக்க பயிற்சி கிரிம பொதுமக்கள் மத்தியில் நடைபெற்றது அதன் பின்னர் குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் உயரமான இடங்களில் தஞ்சம் அடைந்து சிக்கி தவிக்கும் பொதுமக்களை மீட்டு அவர்களுக்கு முதலுதவி மற்றும் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைத்து உரிய ஆலோசனை மற்றும் பயிற்சி ஆகியவை மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த ஒத்திகை பயிற்சியில் தீயணைப்பு துறை வருவாய் துறை காவல் துறை பொதுப்பணித்துறை மின்சார துறை ஊரக வளர்ச்சித் துறை என பல்வேறு துறை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த நிகழ்வு நடைபெற்றது.