சிலர் காதலுக்காக அழுதிருக்கலாம் இல்லை காதலுக்காக தியாகம் செய்யலாம் , ஆனால் இந்த சம்பவம் மிகவும் வினோதமானது. அசாம் மாநிலம் சுவால்குச்சி மாவட்டத்தில் மைனர் பெண் ஒருவர் தனது காதலனை அசாதாரணமான முறையில் காதலித்துள்ளார். 15 வயது இளம்பெண், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட தனது காதலனிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்தத்தை ஊசி மூலம் தனக்குத்தானே செலுத்திக் கொண்டுள்ளார் .

சிறுமி அந்த வாலிபரை பேஸ்புக்கில் சந்தித்து காதலித்து வந்துள்ளார். ஹஜோவில் உள்ள சத்தோலா பகுதியைச் சேர்ந்த சிறுவன் எச்.ஐ.வி-யால் பாதிக்க பட்டுள்ளான், மேலும் காதலனின் நிலையை அறிந்த சிறுமிக்கு காதலன் மீது அன்பு ஆழமாகியுள்ளது. அவர்கள் ஒருவரையொருவர் இல்லாமல் இருக்க முடியாத அளவுக்கு அன்பாக இருந்துள்ளார் .

இந்நிலையில் சிறுமி இந்த தீவிர நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு கடந்த மூன்று ஆண்டுகளாக தம்பதியினர் ஒன்றாக இருந்துள்ளார். சிறுமி கடந்த காலங்களில் தனது காதலனுடன் பலமுறை தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாகவும் ஆனால் அவரது பெற்றோரால் மீண்டும் அழைத்து வரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.