பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கொரோனாவால் பாதிக்கப்படுவது 2வது முறையாகும். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் தற்போது மீண்டும் அமிதாப்பச்சனுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது அவர் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் அமிதாப் விரைவில் குணமாகி மீண்டு வர வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி வருகின்றனர்.
அமிதாப் பச்சன் உஞ்சாய் , குட்பை, புராஜெக்ட் கே மற்றும் தி இன்டர்ன் உட்பட பல படங்களில் நடித்து வரும் நிலையில், அவரது பிரம்மாஸ்திரா அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக இருக்கின்றது.
