விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 150 கிலோமீட்டர் தொலைவிற்கு சுமார் 619 கோடி மதிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பல்வேறு விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்கப்பட்டு வருகின்றன.
இதில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து திருவண்ணாமலை செல்லும் நங்கிலி கொண்டன் என்ற இடத்தில் சுங்கச்சாவடி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் அப்பகுதியில் உள்ள பத்துக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை நிலம் கையகப்படுத்துவதற்கு உரிய இழுப்பிடு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி விவசாயிகள் சுங்கச்சாவடி பணி அமைக்கும் பணியில் ஈடுபடும் ஊழியரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதற்கிடையே சுங்கச்சாவடி ஊழியர்கள் தற்காலிகமாக அப்பொழுது பணியை நிறுத்தி விட்டு சென்று விடுவார்கள்.
ஆனால் வருகின்ற ஆறாம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு விரைந்து பணியை முடிக்க சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதால் நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு எழுப்பிடு வழங்காததால் மீண்டும் அவர்கள் பிரச்சனை செய்ய வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்ற எண்ணத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் தற்பொழுது அந்த இடத்தில் சுங்கச்சாவடி அமைக்கும் பணியினை ஈடுபட்டு வருகின்றனர்.