Skygain News

புதுச்சேரி குடியிருப்பு பகுதிகளில் படையெடுத்த பாம்புகளை லாவகமாக பிடித்த வனத்துறை ஊழியர்கள்…

புதுச்சேரியில் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் புதார் பகுதிகளில் இருக்கும் பாம்புகள் குடியிருப்பு பகுதிகளுக்குல் புகுந்து விடுகிறது, பின்னர் இது தொடர்பாக வனத்துறையினர்க்கு அளிக்கும் தகவலின் பேரில் அவர்கள் பிடித்து எடுத்து செல்கின்றனர், இந்நிலையில் இன்று ஒரே நாளில் குறிஞ்சி நகர் ரமா என்பரது வீட்டில் பதுங்கி இருந்த 2.5 அடி வெள்ளி கோர்வரையான் வகையை சேர்ந்த பாம்பும், எல்லைபிள்ளை சாவடியில் உள்ள அரசு பம்ப் ஹவுஸில் 4.5 அடி நீளமுள்ள நல்ல பாம்பையும் வனத்துறை ஊழியர்கள் நாகராஜ் மற்றும் கோபி லாவகமாக பிடித்து வனத்துறைக்கு எடுத்து சென்றனர்.

இதே போல் ரெயின்போ நகர் 7 வது குறுக்கு தெருவில் 6 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று இருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்து அவர்கள் செல்வதற்குல் அந்த பாம்பு குடியிருப்பு பகுதி அருகே இருந்த அடர்த்தியான மரம் செடிகள் நிரைந்த காலி மனைக்குள் புகுந்தது, இதனை அங்கிருந்த குடியிருப்பு வாசி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார், மேலும் குடியிருப்பு பகுதியில் சுற்றி திரியும் கொடிய விஷம் உள்ள கண்ணாடி விரியன் வகையை சேர்ந்த பாம்பை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More