புதுச்சேரியில் 6 மதுபான தொழிற்சாலை அமைக்க உரிமம் வழங்க ரூ.90 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார் .
இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் அகில இந்திய அளவில் எதிர்கட்சிகள் ஒன்றினைய வேண்டும் என்ற கருத்து வலுத்து வருகின்றது என்றும் பாஜக தன்னை அசைக்க முடியாத சக்தி என்ற மாயயை மக்கள் மத்தியில் உருவாக்கி வருகிறது என்கிறார் .
மேலும் பேசிய அவர் இப்போது நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது அத்தியாவசிப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. டாலருக்கு எதிரான இந்திய பணம் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் மோடி ஆட்சியில் 25 சதவீதம் பேர் வறுமை கோட்டிற்கு கீழ் சென்று விட்டனர். இதனால் மக்கள் உருவாக்க மக்கள் முயற்சித்து வருகின்றனர் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வாங்குவேன் என்று வாக்குறுதி கூறி வந்த ரங்கசாமி அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர மத்திய அரசு ஒப்புக்கொள்ளாத நிலையில் மாநில அந்தஸ்து கேட்கும் ரங்கசாமியின் அரசு போலி அரசாக செயல்படுகின்றது என்று சாடியவர் இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு உரிய நிதியை ஒதுக்காததால் இந்த அரசு நிதி நெருக்கடியில் சிக்கித்தவகின்றது என்றார் நாராயணசாமி
மேலும் புதுச்சேரியில் மதுபானம் தயாரிக்க 6 நிறுவனங்கள் ஒவ்வொன்றுக்கும் உரிமம் கொடுக்க ரூ.15 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக ஆளுங்கட்சி உறுப்பினரே சட்டப்பேரவையில் வெளிப்படையாக பேசியும் முதல்வரிடத்தில் இருந்து எந்த பதிலும் இல்லை என்றும் ஆளுங்கட்சி உறுப்பினரின் குற்றச்சாட்டை தொடர்ந்து ஆளுநர் தமிழிசை மற்றும் முதல்வர் ரங்கசாமி சிபி ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்
இந்திரா காந்தி காந்தி காலத்திலும் தலைவர்கள் கட்சியில் இருந்து பிரிந்து சென்றார்கள் அதனால் காங்கிரஸ் எந்த பின்னடைவையும் எப்போதும் அடையாது என நம்பிக்கை தெரிவித்த அவர். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி வரவேண்டும் என்பது தனது விருப்பம் என்றும் அவரை தேர்தலில் போட்டியிட வலியுறுத்தப்படும் என தெரிவித்த நாராயணசாமி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.