இந்திய அணியின் மீது சமீபகாலமாக ஏகப்பட்ட விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. தவறான முடிவுகள் ,தேவையற்ற மாற்றங்கள் என செய்ததன் காரணமாக ஆசிய கோப்பையின் இறுதி ஆட்டத்திற்கு கூட இந்திய அணியால் முன்னேற முடியாமல் போனது என ரசிகர்கள் முதல் விமர்சகர்கள் வரை கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கின் இடம் குறித்து தான் தற்போது பேச்சுக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஃபினிஷர் என்ற பதவியை அவருக்கு கொடுத்துவிட்டதால் ரிஷப் பண்ட் வெளியே உட்காரவைக்கப்பட்டார். இப்படி இருக்கையில் அவருக்கு சரிவர வாய்ப்பு தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு வலுத்து வருகிறது.

இதுகுறித்து பேசிய முன்னாள் ஆஸ்திரேலியா மற்றும் CSK வீரரான ஹைடன், தினேஷ் கார்த்திக்கின் பணி குறித்து குழப்பமாக உள்ளது. பேட்டிங் வாய்ப்பே சரிவர கிடைக்காமல் அவர் அணியில் இருப்பதே அர்த்தமில்லாத ஒன்று. தினேஷ் கார்த்திக்-ஐ எனக்கு பிடிக்காது என நினைத்துக்கொள்ள வேண்டாம். அவர் ஒரு சிறந்த வீரர். அவருக்கு நிறைய வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று தான் கூறுகிறேன் என அவர் கூறியுள்ளார்.